
அலோர் ஸ்டார், ஜூலை 27 – தற்போதைய அரசாங்கம் தாம் ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைதுச் செய்யப்படுவதை பார்க்க விரும்பினால், அதிகார முறைக்கேடு தொடர்பான பல உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வர தாம் தயாராக உள்ளதாக, கெடா பராமரிப்பு அரசாங்கத்தின் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சனுசி மாட் நோர் கூறியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம், தமக்கும் தமது தலைமையிலான கெடா மாநில அரசாங்கத்துக்கும், அதிகாரத்தை பயன்படுத்தி நெருக்கடி கொடுக்க முயல்வதாகவும் சனுசி குற்றம்சாட்டினார்.
உண்மையில், துன் டாக்டர் மஹாதீரின் தலைமைத்துவத்தின் கீழ் செயல்பட்ட அரசாங்கத்தை காட்டிலும், தற்போது டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமைத்துவத்தின் கீழ் இயங்கும் அரசாங்கம் கொடூரமாக நடந்து கொள்வதாகவும் சனுசி சாடினார்.
கெடா ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அனைவரும் இதற்கு முன் விளக்கமளிக்க ஒருபோதும் ஊழல் தடுப்பு ஆணையத்தால் அழைக்கப்பட்டதில்லை.
கெடா மாநில அரசாங்கம் ஊழல் நிறைந்தது என்ற தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தவே அது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் சனுசி சாடினார்.
REE அரிய கனிமங்கள் திருட்டு மற்றும் பந்தய தளம் அமைப்பது தொடர்பான விசாரணைகளை சுட்டிக் காட்டி சனுசி அவ்வாறு சொன்னார்.