
புத்ரா ஜெயா, செப் 8 – நாட்டில் 73 விழுக்காடு மரணங்கள் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையுடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ள NCD எனப்படும் தொற்றா நோய்களே காரணம் என சுகாதார துணையமைச்சர் Lukaniszman Awang Sauni தெரிவித்திருக்கிறார். நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் தாங்கள் தொற்றா நோய்களை கொண்டுள்ளனரா என்பதை அறிந்திருக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
50 விழுக்காடு மலேசியர்கள் தாங்கள் தொற்றா நோய்களின் பாதிப்பை கொண்டிருக்கின்றனர் என்பதை தெரியாமல் இருக்கின்றனர். தொற்றா நோய்களான உயர் இரத்த அழுத்தம், இருதய நோய், நீரிழிவு போன்றவை மற்றவர்களுக்கு பரவக்கூடிய நோய் அல்ல. இந்த நோய்களை முன்கூட்டியே கண்டறிந்தால் அவற்றை குணப்படுத்த முடியும். பெரும்பாலான நோய்களுக்கு அடிப்படை காரணமாக இருப்பது உடல் பருமன் பிரச்சனையும் ஒரு காரணம் என Lukanisman தெரிவித்தார்.