Latestமலேசியா

ஆர்.எம்.டி திட்டத்திற்கு கூடுதல் நிதியை கல்வி அமைச்சு கோரும்

புத்ராஜெயா, செப் 23 – அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் RMT எனப்படும் பள்ளிகளுக்கான உணவு விநியோக திட்டத்திற்கு கூடுதல் நிதியை வழங்கும்படி கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் வரவு செலவு திட்டத்தற்காக நிதியமைச்சிடம் கல்வி அமைச்சு சமர்ப்பித்த பட்டியலில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் Radzi Jidin தெரிவித்தார். பள்ளி சிற்றுண்டி நிலையத்தை நடத்துவோரில் பலர் அமைச்சிடம் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். உணவு விலை அதிகரித்துள்ளதைத் தொடரந்து R.M.T திட்டத்திற்கு பொருத்தமான கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என பள்ளிகளில் சிற்றுண்டி நிலையங்களை நடத்துவோர் நிதியமைச்சிடம முறையிட்டுள்ளதாக Radsi Jidin தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!