
தலைநகர், அம்பாங் – ஸ்ரீ பெட்டாலிங் இடையிலான, ஆறு LRT இலகு இரயில் நிலையங்களின் சேவை, நாளை காலை மணி ஆறுக்கு மீண்டும் தொடங்குகிறது.
முதல் கட்ட பழுது பாக்கும் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, பண்டாராயா, சுல்தான் இஸ்மாயில், PWTC, திதிவங்சா, செந்தூல், சொந்தூல் தீமோர் ஆகிய அந்த ஆறு நிலையங்கள் நாளை தொடங்கி செயல்படும்.
இதனிடையே, வரும் அக்டோபர் மாதம் வாக்கில், பழுது பார்க்கும் பணிகள் நிறைவடையுமென ராபிட் கேல் நிறுவனம் ஓர் அறிக்கை வாயிலாக தெரிவித்தது.