
தெலுக் இந்தான், மே 13 – தெலுக் இந்தான் படகுத் துறையில் பேரா ஆற்றில் பள்ளி முடிந்து குளிக்க சென்ற முதல் படிவ மாணவர் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக நப்பப்படுகிறது. காணாமல்போன 14 வயது மாணவன் ஜோன்சன் வடிவேலுவை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் அந்த மாணவன் முகத்தை மட்டும் கழுவிக்கொண்டு ஆற்றிலிருந்து வெளியேறுவதை பலர் பார்த்துள்ளனர். பிறகு ஆற்றில் குளிக்கும் நோக்கத்தோடு ஜோன்சன் நீரில் குதித்தாகவும் அப்போது ஆற்று நீரினால் அடித்து செல்லப்பட்டிருக்காம் என கூறப்படுகிறது. கம்போங் கோலாத் திரெங்கானு படகுத்துறையில் அந்த மாணவனின் பள்ளி புத்தக பேக், பள்ளி சீருடை ஆகிவற்றை கண்டதைத் தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து தகவலைப் பெற்றதாக தெலுக் இந்தான் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஜோன்சன் காணாமல்போன இடத்திலிருந்து து ஏழு கிலோமீட்டர் தொலைவில் தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு உதவ போலீஸ் மோப்ப நாய் பிரிவு மற்றும் முக்குளிப்பு பிரிவின் பணியாளர்களும் வரவழைக்கப்பட்டனர். தீயணைப்பு படையின் மூன்று படகுகள், உட்பட 5 படகுகள் துணையோடு 22 பேர் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெலுக் இந்தான் தீயணைப்பு மற்றும் மீடபுக் குழுவின் கமாண்டர் முகமட் இஸ்மாயில் தெரிவித்தார்.