
இஸ்கண்டார் புத்ரி, ஜூன் 3 – ஜொகூர், இஸ்கண்டார் புத்ரியில் உள்ள சுங்கை பூலாய் ஆற்றில் தவறி விழுந்த 38 வயது முனிஸ்வரன் என்பவர் உயிரிழந்துள்ளார். நண்பர்களுடன் ஆற்றின் அருகே பொழுதுபோக்கு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சமயத்தில் மதியம் 3.30 மணியளவில் எதிர்பாரா விதமாக இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மீட்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாலை 7 மணியளவில் முனிஸ்வரனின் உடல் ஆற்றின் 3 மீட்டர் ஆளத்திலிருந்து மீட்கப்பட்டது.