
பாசீர் கூடாங், செப் 11 – பாசிர் கூடாங், தாமான் சென்டானாவுக்கு அருகேயுள்ள ஆற்றில் தனது நண்பர்களுடன் நீந்திக்கொண்டிருந்த 11 வயது சிறுவன் மூழ்கி மரணம் அடைந்தான். நேற்று மாலை மணி 5.16 அளவில் இது தொடர்பான அவசர அழைப்பைப் பெற்றதாக பாசீர் கூடாங் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் நடவடிக்கை அதிகாரி முஹமட் யுஸ்ரி அதான் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அங்கு தேடும் நடவடிக்கைக்காக 9 அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டதாக அவர் கூறினார். முஹமட் டானில் சாஹ்ரி போர்ஹனுடின் என்று அடையாளம் கூறப்பட்ட அச்சிறுவனின் உடல் ஆற்றங்கரையிலிருந்து 3 மீட்டர் ஆழந்தில் கண்டுப்பிடிக்கப்பட்டதாக முஹமட் யுஸ்ரி அதான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே அச்சிறுவன் இறந்துவிட்டதை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.