
பத்து பஹாட் , மார்ச் 25 – ஜோகூர், Paloh, Ladang Tereh Mill ஆற்றோரத்தில், போலீசார் நபர் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளனர்.
எந்தவொரு அடையாள ஆவணமும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், உயிரிழந்தவர் யார் என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை என , குளுவாங் மாவட்ட போலிஸ் தலைவர் Bahrin Mohd Noh தெரிவித்தார்.
ஆடவர் ஒருவர் மீன் பிடிக்க சென்றிருந்தபோது, ஆற்றுப் பகுதியிலிருந்து சுமார் 6 மீட்டர் தூரத்தில் அந்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இச்சம்பவத்தை திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தியிருக்கின்றனர். மேலும், காணாமல் போனதாக புகார் செய்யப்பட்ட நபர்களின் பட்டியலில் உயிரிழந்த அந்த நபர் இடம்பெற்றுள்ளாரா என்பதும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.