
ரஷ்யாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டது அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அல்ல எனும் உக்ரேனின் பகீர் குற்றச்சாட்டு உலக நாடுகளை மிரள வைத்துள்ளது.
நீண்ட காலமாகவே புதினை அந்த குற்றச்சாட்டு சுற்றி வந்தாலும், உக்ரேனுக்கு எதிரான போருக்கு பின்னர் அது மேலும் வலுத்திருப்பதாகவே கூறப்படுகிறது.
குறிப்பாக, தோற்றத்தில் தன்னைப் போலவே இருப்பவர்களை, புதின் ஆள் நடமாட்டத்திற்கு பயன்படுத்துவதாகவும், பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வருவதாகவும் உக்ரேனின் உளவு பிரிவு குற்றச்சாட்டி வருகிறது.
பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை வாயிலாக, அச்சி அசல் தன்னைப் போலவே இருக்கும் மூன்று பேரை புத்தின் உருவாக்கியுள்ளதாக கூறப்படுவதும் அதில் அடங்கும்.
உக்ரேனுக்கு எதிரான படையெடுப்பால் தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எண்ணுவதாலும், புற்றுநோயால் உடல்நலம் மிகவும் மோசமடைந்து விட்டதாலும், கிரெம்லின் மாளிகைக்குள் பதுங்கிக் கொண்டு, தன்னை போல உருவ ஒற்றுமை உள்ள நபர்களை அவர் உலவ விடுவதாகவும் உக்ரேன் குற்றம்சாட்டுகிறது.
எனினும், அந்த குற்றச்சாட்டை கிரெம்லின் மாளிகை பலமுறை திட்டவட்டமாக மறுத்துவிட்ட போதிலும், நேற்று நடைபெற்ற ரஷ்யாவின் வெற்றி விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டது புதினே கிடையாது என மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது.