
செப் 8 – கடந்த ஆகஸ்டு 30ஆம் திகதி ஆழ்கடலில் கண்டெடுக்கப்பட்ட மர்மமான தங்க முட்டை விஞ்ஞானிகளைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
அலாஸ்கா கடற்கரையில் அமெரிக்காவில் உள்ள தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மேற்கொண்டு வரும் ஆய்வில், கப்பலில் இருந்த கடல் உயிரியலாளர்களால் இந்த முட்டை கண்டுபிடிக்கப்பட்டது. தங்க நிறத்தில், முட்டை வடிவில் இருக்கும் இப்பொருளை ஆராயும் முயற்சியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இது எங்கிருந்து, எப்படி வந்தது என்ற விவரம் ஏதும் இன்னும் தெரியாத நிலையில் அதன் உருவத்தைப் பார்த்தால், ஏதோ ஒன்று அதன் உள்ளிருந்து வெளியேறி இருக்கலாம் அல்லது அதனுள் ஏதோ ஒன்று புக முயற்சித்திருக்கலாம் என அவர்கள் கருத்துரைத்துள்ளனர்.