பாப் பெர்ட், பிப் 5- மொரொக்கோவின், தமாருட் மாகாணத்தில் உள்ள 100 அடி ஆழ்துளைக் கிணற்றில் 5 வயது சிறுவன் ஒருவன் தவறிவிழுந்த சம்பவம் அந்நாட்டில் மட்டுமல்லாது மத்திய கிழக்காசிய நாடுகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் அளவில் தவறிவிழுந்த ராயன் எனும் அச்சிறுவனை மீட்கும் பணிகள் தொடர்ந்து நான்காம் நாளாகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதனிடையே, சமூக ஊடக வலைத்தளவாசிகள் ராயன் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என பிரார்த்தித்து வருகின்றனர். மலேசியாவில் #SaveRayan என்ற டுவிட் பதிவுகளே தற்போது முன்னணியில் உள்ளது.
சிறுவன் ராயனை வெளியேற்ற மீட்புப் படையினர் சிமெண்ட் குழாய்கள் போன்றவற்றைக் கொண்டு மேற்கொள்ளும் முயற்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகின்றன.
அந்தச் சிறுவனுக்கு தற்போதைக்குப் போதிய நீரும் பிராணவாயு வசதியும் வழங்கப்பட்டுள்ளன.