Latestமலேசியா

ஆஸ்கர் நாயகி மிச்செல் ஏப்ரல் 18-இல் மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார்

கோலாலம்பூர், ஏப் 3 – இன்னும் இரு வாரங்களில், மலேசிய ரசிகர்களைச் சந்திப்பதற்காக சொந்த நாட்டிற்கு திரும்புகின்றார் ஆஸ்கார் நாயகி டான்ஶ்ரீ மிச்செல் யோ
( Tan Sri Michelle Yeoh ).

ஏப்ரல் 18-ஆம் தேதி, கோலாலம்பூர் பெவிலியன்-இல் ( Pavilion ) நடைபெறும் நிகழ்ச்சியில், அவர் தனது ரசிகர்களைச் சந்திக்கவிருக்கிறார்.
அந்த சந்திப்பு நிகழ்ச்சியில் பொது மக்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். அதற்கு முன்கூட்டியே பதிவு ஏதும் செய்யத் தேவையில்லை.

60 வயதான மிச்செல், அண்மையில் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றதோடு , திரையுலகின் அந்த உயரிய விருதை வென்ற முதல் மலேசியர் என்பதோடு, முதல் ஆசிய நடிகை எனும் சாதனையையும் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!