Latestஇந்தியாசினிமா

ஆஸ்கர் விருது தேர்வுக் குழுவில் நடிகர் சூர்யா, முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட பலர் பாராட்டு

சென்னை , ஜூன் 30 – ஆஸ்கர் விருது தேர்வு குழுவுக்கு நடிகர் சூர்யா தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு ரசிகர்கள் உடபட பல தரப்பினரின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஆஸ்கர் தேர்வுக்குழுவில் இடம்பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையையும் சூர்யா பெற்றுள்ளார். ஆஸ்கர் விருது உறுப்பினர் குழுவில் புதிதாக 397 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் இந்தியாவிலிருந்து நடிகர் சூர்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள சூர்யாவுக்கு தமது மனப்பூர்வ பாராட்டு தெரிவித்துக்கொள்வதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!