
லாஸ் ஏச்ஞ்சல்ஸ், மார்ச் 13 – ராஜமவுளி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு , சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது.
இந்த விருதினை, இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் அப்பாடலை எழுதிய சந்திரபோஸ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இதன் மூலம், இந்திய படத்துக்காக ஆஸ்கர் விருது பெறும் முதல் இசையமைப்பாளர் என்ற பெருமையை கீரவாணி பெற்றுள்ளார்.
இப்பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் விருதையும் வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.