
சென்னை, ஜன 25 – தொடர்ந்து அனைத்துலக அளவில் பல்வேறு அங்கீகாரங்களைக் குவித்து வரும் RRR தெலுங்கு திரைப்படம், தற்போது ஆஸ்கார் போட்டிக்கும் தேர்வாகியிருக்கின்றது.
அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற மிக விறுவிறுப்பான பிரபல பாடலான ‘நாட்டு நாட்டு’ பாடல் , சிறந்த இசைக்கான பிரிவுக்கு முன்மொழியப்பட்டிருக்கிறது.
Academy விருதுக்குப் பிறகு, அனைத்துலக திரைப்பட விழாவில் முன்மொழியப்பட்டிருக்கும் முதல் இந்திய திரைப்படமாக RRR விளங்குகிறது.
ஆகக் கடைசியாக, இந்தியர் ஒருவர் ஆஸ்கார் விருதை வென்றது 2009 –ஆம் ஆண்டில்.
Briton Danny Boyle இயக்கிய Slumdog Millionaire திரைப்படத்தில் இடம்பெற்ற Jai Ho பாடலின் வழி இசையமைப்பாளர் AR Rahman ஆஸ்கார் விருதை வென்றார்.
இதனிடையே, இந்தியாவிலிருந்து “The Elephant Whispers” எனும் ஆவணப்படம், சிறந்த ஆவணப் படப் பிரிவுக்கு முன்மொழியப்பட்டிருக்கிறது.