Latestமலேசியா

உருமாறும் தொடர்புத் துறை ; இலக்கவியல் பாதுகாப்பு மறுதோற்ற இயக்கத்தை தொடங்கியுள்ளனர் யு.எஸ்.எம் மாணவர்கள்

பினாங்கு, நவம்பர் 24 – USM – பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின், 2023/2024 தொடர்பு இணங்க துறை மாணவர்கள், இலக்கவியல் பாதுகாப்பு மறு இயக்கத்தை தொடங்கியுள்ளனர்.

இம்மாதம் 17-ஆம் தேதி, அந்த இயக்கம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.

மக்களின் கண்ணோட்டத்தை மறுவடிவமைத்து, இடைவெளியை குறைத்து, சமூகத்தில் குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் பதின்ம வயதினர் மத்தியில் நேர்மறையான மாற்றத்தை ஆதரிப்பதை நோக்கமாக கொண்டு அந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

அந்நிகழ்ச்சியின், முத்தாய் பாய், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட, உளவியல் துறையின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் சொய் வெங் திங்க், “இலக்கவியல் எல்லைகள் – சுய பாதுகாப்பு என்ற தலைப்பில் ஆற்றிய உரை, இலக்கவியல் பாதுகாப்பை உறுதிச் செய்வதன் முக்கியத்துவத்தையும், இலக்கவியல் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் முன்வைக்கும் வகையில் அமைந்திருந்தது.

அதோடு, யதார்த்த உலகிற்கும், இணைய மெய்நிகர் உலகிற்கும் இடையில சமநிலையை கண்டறியும் வகையிலும் அந்த உரை நிகழ்த்தப்பட்டது.

இலக்கவியல் தொழில்நுட்பத்தின், அதிகபடியான பயன்பாட்டின் எதிர்மறையான விளைவுகளை சமாளிக்கும் முயற்சியின் தொடக்க கட்ட முயற்சியாகவே அந்த இயக்கம் அறிமுகம் கண்டுள்ளது. குறிப்பாக, “இலக்கவியல் டிப்ரஷன்” அல்லது அழுதத்தை தவிர்க்கும் முயற்சி அதுவாகும்.

18 முதல் 29 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களையும், 13 முதல் 17 வயதுக்கு உட்பட்ட பதின்ம வயதினரையும் குறி வைத்து அந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

மாறாக, விழிப்புணர்வை மேம்படுத்துதல், ஆரோக்கியமான முறையில் இலக்கவியல் பயன்பாட்டை ஊக்குவித்தல், பொறுப்புணர்வோடு அதனை கையாள்வது ஆகியவற்றையும் அது நோக்கமாக கொண்டுள்ளது.

இலக்கவியல் பாதுகாப்பு மறுதோற்ற இயக்கம், இலக்கவியல் “டிப்ரஷன்” அல்லது அழுத்தம் மீதான விழிப்புணர்வை மேம்படுத்துதல், இலக்கவியல் அழுத்தம் தொடர்பான தொடக்க கட்ட அறிகுறிகளை கண்டறிதல், மனநலம் மீதான தவறான கண்ணோட்டத்தை களைதல், பொறுப்போடு இலக்கவியலை பயப்படுத்துவதோடு, தேவைப்படும்போது உதவிகளை வழங்குவதல் என நான்கு முதன்மை இலக்குகளை கொண்டுள்ளது.

அதனால், இளைஞர்களுக்கும், பதின்ம வயதினருக்கும் பாதுகாப்பான இலக்கவியல் சூழலை ஏற்படுத்தி தருவதே அந்த இயக்கத்தின் நோக்கமாகும்.

அந்த இயக்கத்தின் வாயிலாக, சமூக ஊடக பயன்பாட்டை சமநிலைப்படுத்த முடியும். அதோடு, இலக்கவியல் பயன்பாடு தொடர்பான மனநல விவாதங்களையும் வெளிப்படையாக மேற்கொள்ள முடியும். இலக்கவியல் அழுத்தத்தை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கு தேவையான உதவிகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்க முடியும்.

அதனால், இலக்கவியல் அழுத்தம் தொடர்பில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, மனநல ஆரோக்கியத்தையும் மேம்படுத்த முடியும்.

அதனால், இலக்கவியல் பாதுகாப்பு மறுதோற்ற இயக்கத்தின் கீழ், இலக்கவியல் உலகம் தொடர்பான சிறந்த அனுபவங்களை இளைஞர்களுக்கும், பதின்ம வயதினருக்கும் வழங்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இலக்கவியல் மறுதோற்ற இயக்க பயிற்சி, இலக்கவியல் அறிமுகம், கலை கண்காட்சி, போட்டிகள் ஆகியவற்றுடன் அந்த இயக்கத்தின் நிறைவு விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனால், அந்த இயக்கத்தின் வெற்றிக்கு அனைத்து தரப்பினருக்கும் தங்களால் இயன்ற பங்கினை ஆற்ற முடியுமென எதிர்ப்பார்க்கப்படுவதாக, அதன் திட்ட நிர்வாகி இளங்கோவன் நாயர் நாராயணன் தெரிவித்தார்.

இலக்கவியல் பாதுகாப்பு மறுதோற்ற இயக்கம் விழிப்புணர்வை மட்டுமே சார்ந்த ஓர் இயக்கம் அல்ல. மாறாக, சமநிலையான, பாதுகாப்பான இலக்கவியல் உலகை உருவாக்கும் அரிய வாய்ப்பு.

அவ்வியக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அல்லது திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள, reboot.usm இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தை வலம் வரலாம். அல்லது 011-18847489 என்ற எண்களில் இளங்கோவனை தொடர்புக் கொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!