சிட்னி, மே 28 – ஆஸ்திரேலியாவின் கிழக்கு கரைப் பகுதியில் பெய்த கடுமையான மழையைத் தொடர்ந்து அங்கு முக்கிய நகர்கள் மற்றும் மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் ‘வெள்ளம் ஏற்பட்டது.
வெள்ள நிலைமை மேலும் மோசமாகலாம் என அதிகாரிகள் எச்சரித்தனர். வெள்ளத்தில் மேலும் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து இதுவரை எண்மர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. Brisbane ஆற்றில் நீரோட்டம் கரை புரண்டு ஓடியதால் அங்கு சுமார் 15,000 வீடுகள் பாதிக்கப்பட்டன.
அதிக மக்கள் தொகை கொண்ட New South Wales சில் வெள்ள பேரிடர் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என அந்நாட்டின் பிரதமர் Scott Morris தெரிவித்தார். தென் மேற்கு மாநிலமான Queensland ந்தில் புயலுடன் ஏற்பட்ட கடுமையான மழையினால் பலர் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டன. 50,000த்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டன.