மெல்பர்ன், பிப் 22- மலேசியாவிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் பெற்றிருக்கும் மலேசிய திருநங்கை Nur Sajat, கிட்டதட்ட ஐந்து மாதப் போராட்டத்திற்குப் பின்னர், அங்கு தனது பாலினம் பெண்ணாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்திருத்திருக்கின்றார்.
ஆஸ்திரேலியா எனது பாலினத்தையும் உணர்வையும் நன்கு புரிந்துகொண்டுள்ளது. இந்த ஒப்புதலால் நான் தற்போது முழுப் பெண்ணாகவும், சுதந்திரமாக இருப்பதையும் உணர்கிறேன் என Sajat தமது வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து, பாலினம் பெண்ணாக மாற்றப்பட்டதற்காக, இயல்பெயரை மாற்றுவீரா என வலைத்தளவாசிகள் கேட்ட கேள்விக்கு, உலகத்திற்கே Sajat என்ற பெயர் தெரியும், அதனால் இந்தப் பெயரை மாற்ற தனக்கு விருப்பமில்லை எனவும் கூறினார்.