ஆஸ்திரேலியாவில் மனைவியை எசிட் ‘குளியல்’ மூலம் கொடூரமாகக் கொன்ற கணவன்

கேன்பரா, பிப்ரவரி-4 – ஆஸ்திரேலியா, கேன்பராவில் கணவனின் படுபாதகச் செயலால் எரிதிராவகத்தில் குளித்து பரிதாபமாக உயிரை விட்டுள்ளார் மனைவி.
மருத்துவ மாணவியான 19 வயது Arnima Hayat என்பவரே மரணமடைந்த பெண்ணாவார்.
அவரின் 20 வயது கணவர் Meraj-டுக்கு மனைவி மீது பொறாமை; மற்ற ஆண்களுடன் அவர் பழகுவதால் சந்தேகம் வேறு.
இதனால் வெளியில் எரிதிராவகத்தை வாங்கி வந்து, வீட்டில் மனைவி குளிக்கும் தொட்டியில் கலந்துள்ளார்.
முதலில் 20 லிட்டர் ஹைட்ரோகுளோரிக் (hydrochloric) வாங்கி வந்தவர், மீண்டும் 80 லிட்டரை வாங்கி வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று குளியலறைத் தொட்டியில் Arnima குப்புற இறந்துகிடந்தார்.
மரபணு பரிசோதனை நடத்தியே அவரை அடையாளம் காணும் அளவுக்கு உடல் உருக்குலைந்துப் போயிருந்தது.
கணவருக்குக் கடைசியாக குறுந்தகவல் அனுப்பிய 45 நிமிடங்களுக்குப் பிறகே Arnina இறந்துகிடந்தார்.
இதையடுத்து Meraj தலைமறைவானார்; எனினும் போலீஸ் அவரின் புகைப்படத்தை வெளியிட்ட 20 மணி நேரங்களில் அவர் சரணடைந்தார்.
2021-ஆம் ஆண்டில் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் இன்றி இரகசியமாகத் திருமணம் செய்துகொண்ட இருவரும், சிட்னி புறநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளது விசாரணையில் கண்டறியப்படது.