கிரெப்டன், மார்ச் 1 – ஆஸ்திரேலியாவின் கிழக்குக்கரை பகுதியில் வெள்ளப் பேரிடர் மோசமடைந்தது. மக்கள் வீட்டின் கூரைகளிலும் பாலங்களிலும் நின்றுகொண்டு உதவிக்காக காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெள்ளம் மோசமாகி வருவதால் மக்கள் உடனடியாக தங்களது வீடுகளிலிருந்து வெளியேறும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர். Queensland மற்றும் New South Wales சில் ஆறுகளில் நீரோட்டோம் கரைபுரண்டு ஓடுகின்றன.
வெள்ளத்தினால் இதுவரை எண்மர் மூழ்கி மாண்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண மையங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். Lismore என்ற நகரில் 9 பேர் காணவில்லை என்றும் அறிவிக்கப்பட்டது.