சிட்னி, மார்ச் 4 – வார இறுதியில் கடுமையாக மழை பெய்யக்கூடும் என்பதால் ஆஸ்திரேலியாவில் வெள்ள நிலைமை மிகவும் மோசமடையக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியவின் கிழக்குப் பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழையினால் அங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் மீட்பு நடவடிக்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
தென் Queensland மற்றும் New South wales சின் வட பகுதியில் வெள்ளப் பேரிடர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தயுள்ளதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளப் பேரிடரால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளனர். பெரிய அளவில் கால்நடைகளும் அழிந்தன. இதுவரை வெள்ளத்திற்கு 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காணவில்லை என்றும் அறிவிக்கப்பட்டது.