சிட்னி, பிப் 22 – இரண்டு ஆண்டு காலமாக கோவிட் தொற்று பரவலினால் தனது எல்லைப் பகுதியை மூடியிருந்த ஆஸ்திரேலியா இன்று வெளிநாட்டு சுற்றுப்பயணிகளுக்காக எல்லைப் பகுதியை திறந்தது.
50 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு விமானங்கள் இன்று ஆஸ்திரேலியா வந்தடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அவற்றில் 27 விமானங்கள் சிட்னியில் தரையிருங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நாளுக்காக தாம் நீண்ட நாளாக காத்திருந்ததாக ஆஸ்திரேலிய பிரதமர் Scott Morrison தெரிவித்தார். ஆஸ்திரேலியா தனது வருமானத்திற்கு பெரிய அளவில் சுற்றுலாத்துறையை நம்பியிருக்கிறது. ஆனால் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து அந்நாட்டின் எல்லைகள் மூடப்பட்டதால் சுற்றுப்பயணிகளின் வருமானத்தை ஆஸ்திரேலியா இழந்தது.