சிட்னி, மார்ச் 2 – ஆஸ்திரேலிய பிரதமர் Scott Morrison கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். அவர் காய்ச்சல் உட்பட சளியினால் பாதிக்கப்பட்டுள்ளார். சுகாதார வழிகாட்டிகளை தொடர்வதோடு சிட்னியிலுள்ள தமது இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக Scott Morrison வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார்.
தனித்திருக்கும் நடவடிக்கையின்போது உக்ரைய்ன் போர் தொடர்பான அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த நடவடிக்கை மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள போரிடருக்கான அவசர உதவிளுக்கான பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதாக அவர் தெரிவித்தார்.