
நார்தம்பர்லேண்ட், செப்டம்பர் 30 – இங்கிலாந்தில், வரலாற்றுச் சிறப்புமிக்க மரத்தை வேண்டுமென்றே வெட்டியதாக நம்பப்படும், 16 வயது பதின்ம வயது இளைஞர் ஒருவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 200 ஆண்டுகள் பழமையான அந்த மரம், ரோமானியப் பேரரசு ஆட்சியின் போது கட்டப்பட்ட பிரபல ஹட்ரியன் சுவருக்கு (Hadrian’s Wall) அருகில் அமைந்திருந்தது.
ஒவ்வொரு ஆண்டும் ஹட்ரியன் சுவரை காண, லட்சக்கணக்கான சுற்றுப் பயணிகள் வருகை புரியும் வேளை ; அதனை உலக பாரம்பரிய தளமாக, ஐநாவின் UNESCO அமைப்பு பிரகடனப்படுத்தியுள்ளது.
1991-ஆம் ஆண்டு, வெளியான “ராபின் ஹூட் : பிரின்ஸ் ஆப் தீவ்ஸ்” திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட அம்மரம், ஹட்ரியன் உலகப் பாரம்பரிய தளத்தின் பிரசித்தி பெற்ற சின்னமாக விளங்கி வந்தது.
அம்மரத்தை வெட்டிய இளைஞர், வேண்டுமென்றே கிரிமினல் சேதம் குற்றச்சாட்டு தொடர்பில் கைதுச் செய்யப்பட்டதை, போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.