லண்டன் , ஏப் 7 – லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் நேற்று இழுத்துச் செல்லப்பட்டபோது, காலியான Virgin Atlantic ஜெட் விமானத்தின் இறக்கை முனை நின்று கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்துடன் மோதியதாக விமான நிறுவனங்கள் தெரிவித்தன. இச்சம்பவத்தில் பயணிகள் எவரும் காயம் அடையவில்லை. இதனால் பிரிட்டனின் பரபரப்பான Heathrow விமான நிலையத்தின் செயல்பாடுகளில் தாக்கம் அல்லது பாதிப்பு எதுவும் ஏற்படவில்லையென கூறப்பட்டது.
எங்கள் விமானம் எங்கள் பொறியியல் குழுக்களால் மதிப்பிடப்படுகிறது, மேலும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் கட்டுப்படுத்த மாற்று விமானத்தை நாங்கள் வழங்கியுள்ளோம் என்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு Virgin Atlantic-கின் போயிங் 787-9 3 விமானம் இழுத்துச் செல்லப்பட்டபோது அதன் இறக்கை பகுதி மற்றொரு விமானத்தில் மோதியதாக அந்த நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்நிலையில், முழுமையான விசாரணையை நாங்கள் தொடங்கியுள்ளோம். அந்த விமானம் தற்போது சேவையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.