Latestஉலகம்

இங்கிலாந்தில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள்; கற்கள் வீசப்பட்டு, வானவெடிகள் வெடிக்கப்பட்டதில் போலீஸ்காரர்கள் காயம்

பிளேய்மௌத், ஆகஸ்ட்-6 – பிரிட்டனின், பிளேய்மௌத் (Plymouth) நகரில் இரு ஆர்ப்பாட்டக் கும்பல்கள் மோதிக் கொண்டதில் போலீஸ்காரர்கள் சிலர் காயமடைந்திருக்கின்றனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசியதோடு வானவெடிகளையும் வெடித்ததில், ஒரு போலீஸ் வேனும் கடுமையாகச் சேதமடைந்தது.

புலம்பெயர்ந்தோரை எதிர்க்கும் ஆர்ப்பாட்டக் கும்பல், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இனவாதத்தை எதிர்த்து நிற்போம் (‘Stand Yo To Racism’) என்ற பெயரில் கூடிய கும்பலுடன் நேருக்கு நேர் மோதிய போதே நிலவரம் கலவரமானது.

ஜூலை 29-ஆம் தேதியன்று சௌத்போர்ட்டில் (Southport) நகரில் நடைபெற்ற ‘டெய்லர் சுவிஃப்ட் யோகா மற்றும் நடனப் பயிலரங்கில்’ கலந்து கொண்ட 3 சிறுமிகள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனர்.

இதனால் கலவரம் வெடித்து தீவிர வலச்சாரி கும்பல்கள் இங்கிலாந்து முழுவதும் சாலை ஆர்ப்பாட்டங்களில் இறங்கியுள்ளன.

இரு ஆர்ப்பாட்டக்கார கும்பல்களும் மோதிக்கொளாதிருக்க நடுவில் தடுப்பு அமைத்துச் செயல்படும் போலீஸ்காரர்களுடன் வலசாரி கும்பல் தொடர்ந்து மோதி வருகிறது.

கடைகளைச் சூறையாடியும், கட்டடங்களைச் சேதப்படுத்தியும், எறிகணையும் வீசி அவர்கள் எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர்.

மசூதிகளையும் குறிவைத்து மோதல்கள் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை நூற்றுக்கணக்கானோர் கைதாகியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!