Latestஉலகம்

இங்கிலாந்தில் 5 முதல் 11 வயதுடைய சிறார்களுக்கு கோவிட் தடுப்பூசி

லண்டன், பிப் 17 – இங்கிலாந்தில் 5 முதல் 11 வயதுடைய அனைத்து சிறார்களுக்கும் கோவிட்டிற்கு எதிரான தடுப்பூசி போடப்படும் என பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்துள்ளது. சிறார்களுக்கு Pfizer மற்றும் BioNTech தடுப்பூசிகளை பிரிட்டிஷ் சுகாதார அதிகாரிகள் அங்கீகரித்துள்ளனர்.

அமெரிக்கா ,ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் இதர நாடுகள் 5 முதல் 11 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்வந்ததைத் தொடர்ந்து பிரிட்டனும் இந்த நடவடிக்கையை எடுக்கத் தொடங்கியுள்ளது.

எதிர்காலத்தில் கோவிட் தொற்றுடன்தான் வாழ்க்கையை நடத்த வேண்டியிருக்கும் என்பதால் தங்களது பிள்ளைகளின் பாதுகாப்பை கருதி அவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு பெற்றோர்கள் முன்வர வேண்டுமென இங்கிலாந்து சுகாதார அமைச்சர் Sajid Javid அறைகூவல் விடுத்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!