
லண்டன் , ஜூன் 4 -இங்கிலாந்து எப்.ஏ கிண்ணத்தை மென்செஸ்டர் சிட்டி வென்றது . நேற்றிரவு நடபெற்ற இறுதியாட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி 2 – 1 என்ற கோல் கணக்கில் மென்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டம் தொடங்கிய 12 ஆவது வினாடியில் Llkay Gundogan ஒரு கோலை அடித்து பெரும் அதிர்ச்சியை ஏறபடுத்தினார். எப்.ஏ கிண்ண காற்பந்து போட்டியின் இறுதியாட்டத்தில் ஆட்டம் தொடங்கிய 12ஆவது வினாடியிலேயே அவர் அந்த கோலை அடித்தார். பிற்பகுதி ஆட்டத்தில் Gungdogan மேலும் ஒரு கோலை அடித்ததன் மூலம் மென்செஸ்டர் சிட்டி ஏழாவது முறையாக லீக் கிண்ணத்தை வென்றது.