Latestமலேசியா

இசைப்புயல் AR Rahman புக்கிட் ஜாலில் விளையாட்டரங்கை அதிரச் செய்தார்

கோலாலம்பூர், ஜன 29 – இசைப் புயல் A.R Rahman Bukit Jalil விளையாட்டரங்கை தமது இசை நிகழ்ச்சியின் மூலம் நேற்றிரவு அதிரச் செய்தார். Oscar விருது வென்றவருமான AR Rahmah அந்த விருது பெற்றதற்கு தகுதியானவர் என்பதை நிருபிக்கும் வகையில் bukit Jalil தேசிய விளையாட்டரங்கில் திரண்டிருந்த 60,000 ரசிகர்ளை தமது இசை நிகழ்ச்சியின் வாயிலாக மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார். இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், என்ற பன்முகத்தன்மையை கொண்ட Rahman நேற்றிரவு மணி 8.30 முதல் இசைநிகழ்ச்சியை படைத்து மலேசிய ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தார்.

Sivaji the boss திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடலுடன், Chaiya chaiya, ஊர்வசி ஊர்வசி ,வந்தே மாதரம் போன்ற பாடல்களையும் அவர் பாடி ரசிகர்களின் பலத்த கைதட்டலை பெற்றார். Secret of Success: Live in Malaysia 2023 என்ற தலைப்பிலான AR Rahman இசை நிகழ்ச்சியில் பிரபல பின்னணி பாடகரான Hariharan, Shweta Mohan ஆகியோர் பாடல்களை பாடியதோடு Drum கலைஞர் சிவமணியும் தமது திறமையை காட்டினார். இவர்களுடன் நம் நாட்டு பிரபல பாடகியான சித்தி நோர் ஹலிசாவும் முன்பே வா தமிழ்ப்பாடலை பாடி அரங்கத்தை அதிர வைத்தார். சித்தி நோர் ஹலிசாவுடன் பாடகர் ஹரிசரன் இப்பாடலை பாடினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ Anwar Ibrahim, அவரது துணைவியார் டாக்டர் வான் அஜிஸா, தகவல் மற்றும் இலக்கவியல் அமைச்சர் Fahmi Fadzil, மலேசியாவிலுள்ள இந்திய தூதர் B.N Reddy ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!