
கோலாலம்பூர், மே 17 – அண்டை வீட்டுக்காரர் தூங்கும் நேரத்தில் இடிக்கல்லை இடித்து தொந்தரவை ஏற்படுத்தியதால், ஆத்திரம் அடைந்த நபர் ஒருவர் தனது அண்டை வீட்டுக்காரருக்கு எச்சரிக்கை நோட்டிஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் “ நடு இரவில் இடிக்கல்லை பயன்படுத்தாதீர்கள். மற்றவர்களின் தூங்கும் நேரத்திற்கு மதிப்பளியுங்கள். மீண்டும் சத்தம் கேட்டால், அதனை பதிவுச் செய்து நிர்வாகத்திடம் புகார் செய்வேன்’ என எழுத்தப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது சர்சையாகிருப்பது, அந்த நோட்டிஸ் அல்ல, அந்த சத்தம் எங்கிருந்து வந்தது என்பதே.
பக்கத்து வீட்டுக்காரரின் அந்த நோட்டிஸை பார்த்த சம்பந்தப்பட்ட வீட்டுக்காரர் அதனை இணையத்தில் பதிவிட்டு, தன்னிடம் இடிக்கல்லே இல்லை பின்னர் நான் எப்படி சத்தம் போட்டிருக்க முடியும் என்று வினவியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல், அடுத்து அவர் கூடியிருக்கும் விஷயம்தான் நம்மை அச்சத்தில் உடைய வைக்கிறது.
தினமும் இடிக்கல் இடிக்கும் சத்தம், நாற்காலியை நகர்த்தும் சத்தம் உட்பட பல்வேறு விநோதமான சத்தங்கள் தனக்கு கேட்பதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.
இச்சம்பவம் தலைநகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்திருக்கிறது.
இந்த பதிவு இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில், அதே குடியிருப்பைச் சேர்ந்த பலரும் தங்களுக்கும் இந்த விநோதமான அனுபவம் ஏற்பட்டுள்ளதாக கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
இது அமானுஷ்ய வேலையாக இருக்கும் எனவும் கருத்துகள் குவிந்து வருகின்றன.