ரவுப் , பிப் 22 – பத்திரிகைகளை வினியோகிப்பதற்கு எடுத்துச் சென்ற லோரி இடிந்த பாலத்தில் சிக்கிக்கொண்டது. இச்சம்பவத்தில் லோரி ஓட்டுனர் காயம் அடைந்தார்.
Tras சீன கோயிலுக்கு அருகே Tranum என்ற இடத்தில் இடிந்த பாலத்தில் அந்த லோரி சிக்கிக் கொண்டது. அதிகாலை 3 மணியளவில் அந்த லோரியை ஓட்டிச் சென்ற ஆடவர் இடிந்த பாலத்தில் சிக்கிக்கொண்டார்.
காயம் அடைந்த 30 வயதுடைய லோரி ஓட்டுனர் சிகிச்சைக்காக பெந்தோங் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். பாலம் இடிந்ததால் சாலையில் இரு பகுதிகளும் போக்குவரத்திற்கு மூடப்பட்டது.
நேற்றிரவு மணி 11.30 முதல் இன்று அதிகாலை மணி 3 வரை கடுமையான மழை பெய்ததைத் தொடர்ந்து அந்த பாலம் இடிந்ததாக கூறப்பட்டது.