கோலாலம்பூர், பிப் 23 – தற்போது நாட்டின் சில பகுதிகளில் வேகமான காற்று வீசி வருவதோடு, இடியுடன் கூடிய கன மழையும் பெய்து வரும் நிலையில் , அந்த மோசமான வானிலை மார்ச் மாதம் தொடக்கம் வரை நீடிக்குமென கணிக்கப்பட்டுள்ளது.
தீபகற்பத்தின் மேற்கு கடற்கரை மாநிலங்களில் மாலை, இரவு நேரங்களில் அதிகம் இடியுடன் கன மழை பெய்யுமென மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் தலைமை இயக்குநர் Muhammad Helmi Abdullah எச்சரிக்கை விடுத்துள்ளார்.