Latestமலேசியா

இடியுடன் கூடிய கன மழை; ஈப்போவில் பல இடங்களில் திடீர் வெள்ளம்

ஈப்போ, ஜனவரி-6, நேற்று மாலை பெய்த இடியுடன் கூடிய கன மழையால், ஈப்போவில் பல இடங்களில் திடீர் வெள்ளமேற்பட்டது.

Taman Cempaka, Tambun பட்டணம்,  Razaki பட்டணம் மற்றும் Kampung Sungai Rokam உள்ளிட்டவை அதில் பாதிக்கப்பட்டன.

குறிப்பாக Taman Cempaka-வில் 0.6 மீட்டர் உயரத்திற்கு வெள்ள நீர் மட்டம் இருந்துள்ளது.

எனினும் நேற்றிரவு 8 மணி வரையில் அப்பகுதி வாழ் மக்கள் எவரும் வெளியேற்றப்படவில்லை என, ஈப்போ தீயணைப்பு – மீட்புத் துறையின் பேச்சாளர் தெரிவித்தார்.

என்றாலும், 7 LFRT இயந்திரங்களில் அங்கு தொடர் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வேளையில், சமூக ஊடகங்களில் பார்த்த வரைக்கும், Jalan Raja Dihilir-ரில் Taman Rekreasi Padang Polo-விலிருந்து Jalan Sultan Azlan Shah சாலை சந்திப்பு வரை திடீர் வெள்ளம் ஏற்பட்டதாகத் தெரிய வந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!