சிரம்பான், பிப் 21- நேற்று மாலை பெய்த இடியுடன் கூடிய கனத்த மழையால், நெகிரி செம்பிலான், தம்பினிலுள்ள ( Tampin), Gemas – சில், 30 வீடுகள் சேதமடைந்தன.
நேற்று மாலை மணி 5.30 தொடங்கி அரை மணி நேரம் நீடித்த அந்த மோசமான வானிலையால் Felda Jelai ஒன்றிலிருந்து நான்கு வரையிலான நில குடியேற்றப் பகுதிகளில் உள்ள வீடுகள் பாதிக்கப்பட்டதாக கெமாஸ்-சிலுள்ள தீயணைப்பு மீட்பு படையின் தலைவர் Mohd Farid Abu Bakar தெரிவித்தார்.
கனமழையைத் தொடர்ந்து வீசிய வேகமான காற்றினால் வீட்டின் கூரைகள் பறந்ததோடு, மரங்கள் விழுந்து கார்கள் சில சேதமடைந்ததாகவும் அவர் கூறினார்.