ஷா அலாம், மார்ச் – தங்கும் வசதியைக் கொண்ட பள்ளிகளைத் தவிர இடைநிலைப் பள்ளி மாணவர்கள் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் நேரடியாக வகுப்பில் கலந்து கொள்வார்கள் என கல்வி அமைச்சர் செனட்டர் டத்தோ டாக்டர் Mohd Radzi Md Jidin தெரிவித்தார்.
March 21 ஆம் தேதி தொடங்கி 2 வாரங்களுக்கு இடைநிலைப் பள்ளி மாணவர்கள் தங்களது வீட்டிலேயே கற்றல் நடவடிக்கையில் பங்கேற்பார்கள். அதன்பின் இடைநிலைப் பள்ளி மாணவர்கள் நேரடியாக பள்ளிகளில் நடைபெறும் வகுப்புகளில் கலந்துகொள்வார்கள் என அவர் கூறினார்.
இதனிடையே தங்கும் விடுதி வசதியைக் கொண்ட பள்ளிகளில் முதல் படிவத்தில் பயில்வதற்கு வாய்ப்பை பெற்ற மாணவர்கள் வீட்டில் இணைய வாயிலாக கல்வியை தொடர்வதா அல்லது அருகேயுள்ள பள்ளிகளில் நேரடியாக வகுப்புக்களில் கலந்து கொள்வதா என்பது குறித்து கல்வி அமைச்சு முடிவு செய்யும் என்றும் Mohd Radzi கூறினார். இது தற்காலிக ஏற்பாடாகவே இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.