கோலாலம்பூர், செப்டம்பர் – 20 – கடலுக்கடியில் கேபிள்கள் கோளாறடைந்திருப்பதை TELEKOM Malaysia உறுதிபடுத்தியுள்ளது.
இதனால் இணையப் பயன்பாடு குறிப்பாக Unifi இணையச் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்ளாகவே Unifi இணையச் சேவை மந்தமடைந்துள்ளதாக ஏராளமான பயனீட்டாளர்கள் சமூக ஊடகங்களில் விரக்தியை வெளிப்படுத்தியிருந்த நிலையில், TM அவ்வாறு தெளிவுப்படுத்தியுள்ளது.
இணையச் சேவையை சீரமைத்து மேம்படுத்த உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனினும், இணையச் சேவையில் ஏற்பட்டுள்ள இடையூறு எப்போது நீங்கும் என்பதற்கான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
எதுவாக இருந்தாலும் அவ்வப்போது பயனர்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருமென்றும் TM உறுதியளித்தது.