
தொக்யோ, ஜூன் 16 – இணையத்தில் ஒருவரை அவமதித்தால், ஓராண்டு வரை சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய சட்டத்தை ஜப்பான் இயற்றியிருக்கின்றது. அந்த சட்டத்தின் கீழ், ஓராண்டு சிறை அல்லது 2,200 டாலர் வரையிலான அபராதத்தை விதிக்க முடியும்.
மல்யுத்த வீராங்கனையும், Netflix ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் பிரலமும் ஆன 22 வயது Hana Kimura-வின் தற்கொலைக்குப் பின்னர் , ஜப்பான் இந்த கடுமையான தண்டனையை வழங்கும் சட்டத்தை இயற்றியிருக்கிறது.
தமது இறப்புக்கு முன்னதாக Kimura இணையத்தின் வாயிலாக அதிகமான வெறுக்கத்தகும் பதிவுகளை பெற்றதாக கூறப்பட்டது.