புது டெல்லி, செப்டம்பர் -3, இந்தியாவில், இணையம் வாயிலாக Pressure Cooker-ருக்கு முன்பதிவுச் செய்த ஆடவருக்கு, ஈராண்டுகள் கழித்து அது கையில் வந்து கிடைத்திருப்பது வைரலாகியுள்ளது.
Jay எனும் அந்நபர், 2022-ஆம் ஆண்டு அமேசான் (Amazon) வாயிலாக அந்த pressure cooker-ரை வாங்கியிருக்கிறார்.
ஆனால் முன்பதிவுச் செய்த வேகத்தில் அவர் ஆர்டரை ரத்துச் செய்து விட்டார்.
அவர் செலுத்திப் பணமும் அப்போதே திருப்பித் தரப்பட்டு விட்டது.
இந்நிலையில், ஈராண்டுகள் கழித்து ஆகஸ்ட் 28-ஆம் தேதி அவரின் வீட்டுக் கதவுக்கு வெளியே அந்த pressure cooker அடங்கிய பொட்டலம் வந்திறங்கியது.
இதனால் ஆச்சிரியம் அடைந்த Jay, ஈராண்டுகள் கழித்து வந்து சேர்ந்திருப்பதால் இது கண்டிப்பாக சிறப்பு வாய்ந்த pressure cooker-ராகத் தான் இருக்குமென நகைச்சுவையாகக் கூறி Amazon-னுக்கு நன்றி தெரிவித்தார்.
பதிவைப் பார்த்த நெட்டிசன்கள், ஈராண்டுகள் எடுத்திருப்பதால் pressure cooker ஒருவேளை விண்வெளியில் இருந்து வந்திருக்குமோ என பதிலுக்கு நகைச்சுவையாகக் கூறினர்.
இன்னொரு நெட்டிசனோ, “நேரம் என்ன நேரம், கட்டியப் பணமும் திரும்ப கிடைத்து விட்டது, பொருளும் வந்து சேர்ந்து விட்டது, அனுபவியுங்கள்” என்றார்.