Latestஉலகம்

இணையத்தில் கேலிக்கூத்தான AI drive-thru முறையை நிறுத்திய McDonald’s

நியூ யோர்க், ஜூன்-19 – வாடிக்கையாளர்கள் மத்தியில் கேலிக்கூத்தானதால்,
AI அதிநவீன தொழில்நுட்பத்துடன் இயக்கப்படும் drive-thru முறையை அமெரிக்காவில் உள்ள தனது அனைத்துக் கிளைகளிலும் McDonald’s நிறுத்தியுள்ளது.

தானியங்கி முறையில் ஆர்டர் எடுக்கும் அம்முறை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நூறுக்கும் மேற்பட்ட McDonald’s உணவகங்களில் இருந்து, வரும் ஜூலை கடைசிக்குள் அது மீட்டுக் கொள்ளப்படுமென அந்நிறுவனம் உறுதிப்படுத்தியது.

IBM உருவாக்கிய அச்சோதனை முறை,
தேர்ந்தெடுக்கப்பட்ட McDonald’s drive-thru உணவகங்களில் 2021 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அந்த AI தொழில்நுட்பத்தால் நூற்றுக்கணக்கானோர் வேலையிழக்கலாம் என்பதே தொடக்கத்தில் அச்சமாக இருந்த நிலையில், எதிர்பாரா வகையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் அது பெரும் கேலிக்கூத்தானது.

Caramel ஐஸ் கிரீம் கேட்டவருக்கு அதில் கரண்டி கரண்டியாக Butter போடப்பட்டதும், Bacon இறைச்சியை ஆர்டர் செய்தவருக்கு ஐஸ் கிரீம் கொடுக்கப்பட்டதும் டிக் டோக்கில் வீடியோவாக வலம் வந்தன.

ஆர்டரே செய்யாதவர்களுக்கு 9 டீ கப்புகளும், நூற்றுக்கணக்கான டாலர் மதிப்பிலான Nuggets இறைச்சிகளும் தரப்பட்ட சம்பவங்களும் அரங்கேறியது McDonald நிர்வாகத்தை ஏமாற்றமடையச் செய்து, இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அந்தொழில்நுட்பம் அதன் உணவகங்களின் எதிர்காலத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என McDonald’s இன்னமும் அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டிருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!