Latestமலேசியா

இணையம் வாயிலாக வேலை வாங்கித் தருவதாகக் கூறும் மோசடிக் கும்பல் அறுவர் கைது

கோலாலம்பூர், ஆக 17 – இணையம் வாயிலாக வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலைச் சேர்ந்த அறுவர் கைது செய்யப்பட்டனர். Jalan Klang Lama ஆடம்பர அடுக்கு மாடி வீட்டில் போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் இரு இந்தோனேசியர்கள் உட்பட அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதை Brickfields மாவட்ட போலீஸ் தலைவர் Amilhizam Abdul Shukor உறுதிப்படுத்தினார். 20 மற்றும் 31 வயதுக்குட்பட்ட இரண்டு உள்நாட்டு ஆடவர்களுடன் இரு பெண்கள் மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒரு ஆடவரும் பெண்ணும் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார். முழுக்க முழுக்க இந்தோனேசியர்களை மோசடி செய்யும் இலக்கில் அக்கும்பல் செயல்பட்டு வந்துள்ளது என Amilhizam வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!