
மும்பை, ஆகஸ்ட்டு 29 – போலிவுட் கிங் என அழைக்கப்படும் பிரபல நடிகர் ஷாருக்கான் வீட்டின் முன், கடந்த சனிக்கிழமை ஆயிரக்கணக்கான ஆண்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, மும்மை, மன்னத்திலுள்ள, ஷாருக்கானின் ஆடம்பர இல்லத்தில் போலீஸ் படை வீரர்கள் நிறுத்தப்பட்டனர்.
இணைய சூதாட்ட விளம்பரம் ஒன்றில் ஷாருக்கான் நடித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்தியை அடுத்து, எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆடவர்கள் அவரது இல்லத்தை முற்றுகையிட்டதாக கூறப்படுகிறது.
இணைய சூதாட்டம் இளம் தலைமுறையினரை சீரழிக்கிறது. அதனால், அது போன்ற நடவடிக்கைகளுக்கு, ஷாருக்கான் போன்ற பிரபலங்கள் துணை போக கூடாது என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதே சமயம், இணையம் மற்றும் செயலி சூதாட்ட நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்படுமெனவும் அவர்கள் சூளுரைத்துள்ளனர்.