Latestமலேசியா

இணைய பகடிவதை சம்பவங்கள் குறித்து பேரரசர் கவலை

கோலாலம்பூர், ஜூலை 11 – சமூக ஊடகங்களில், அதிகரித்து வரும் இணைய பகடிவதை சம்வங்கள் குறித்து, பேரரசர் சுல்தான் இப்ராஹிம் கவலை தெரிவித்துள்ளார்.

எனவே, தொடர்பு அமைச்சும், தொடர்பு பல்லூடக ஆணையமும், அப்பிரச்சனையை களைய தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பேரரசர் கேட்டுக் கொண்டுள்ளதாக, தொடர்பு அமைச்சர் பாஹ்மி பட்சேல் கூறியுள்ளார்.

அண்மையில், மால் ஹிஜ்ரா கொண்டாட்டத்தின் போதும், பிரிவினைக்கும், அவமானகரமான விஷயங்களை பரப்புவதற்கும் சமூக ஊடகங்கள் ஒரு கேடயமாக பயன்படுத்தப்படக்கூடாது என பேரரசர் தமது உரையில் வலியுறுத்தி இருந்ததை, பாஹ்மி சுட்டிக்காட்டினார்.

முன்னதாக, இணைய பகடிவதை காரணமாக மன அழுத்தத்திற்கு இலக்காகி, தற்கொலைக்கு தள்ளப்பட்ட சமூக ஊடகப் பிரபலம் ஏஷா குறித்து தாம் பேரரசருக்கு முழு விளக்கமளித்ததாக பாஹ்மி சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!