ஜாசின், அக்டோபர்-29, இல்லாத ஒர் இணைய முதலீட்டுத் திட்டத்தை நம்பி 80,000 ரிங்கிட் EPF சேமிப்புப் பணத்தை மொத்தமாக பறிகொடுத்துள்ளார், மலாக்கா ஜாசினைச் சேர்ந்த 50 வயது மாது.
ஒரு தனியார் நிறுவனத்தின் முன்னாள் செயலாளினியான அவர், முகநூல் வாயிலாக கண்ட முதலீட்டு விளம்பரத்தால் கவரப்பட்டுள்ளார்.
அதில் கொடுக்கப்பட்ட link இணைப்பைத் தட்டி WhatsApp-பில் சந்தேக நபருடன் அறிமுகமானார்.
1,235 ரிங்கிட்டைச் செலுத்தி ஜூலையில் அத்திட்டத்தில் பதிந்துகொண்டவருக்கு, முதல் கமிஷனாக 8,000 ரிங்கிட் கிடைத்துள்ளது.
இதனால் மகிழ்ந்து போன அம்மாது, மேலதிக இலாபம் பெறும் நோக்கில் EPF சேமிப்பிலும் கை வைத்து விட்டார்.
EPF பணத்தில், பல்வேறு தனிநபர்களின் வங்கிக் கணக்குகளில் கட்டம் கட்டமாக மொத்தம் 82,175 ரிங்கிட்டைப் போட்டுள்ளார்.
ஆனால் சொல்லியபடி இலாப ஈவு வராமல் போகவே, அவருக்கு சந்தேகம் வந்தது.
கேட்டால், மேலும் 20,000 ரிங்கிட்டைச் செலுத்த வேண்டுமென உத்தரவு வந்துள்ளது.
அதன் பின்னரே தாம் மோசடிக்கு ஆளானதை உணர்ந்து அவர் போலீசில் புகார் செய்தார்