Latestமலேசியா

இணைய மோசடிக்காரர்கள் அதிகம் பயன்படுத்தும் 4 முக்கிய சமூக வலைத்தளங்களில் முகநூலும் வாட்ஸ்ஏப்பும் அடங்கும் – பாமி

தும்பாட், ஜன 20 – மலேசியர்களை ஏமாற்றுவதற்காக மோசடி செய்பவர்களால் அடிக்கடி பயன்படுத்தப்படும் நான்கு சமூக வலை தலங்களில் முகநூல், WhatsApp ஆகிவற்றுடன் டெலிகிராம் மற்றும் டிக்டாக் ஆகியவை அடங்கும்.

இதனால் மில்லியன் கணக்கான ரிங்கிட் வரை இழப்பு ஏற்பட்டதாக தொடர்பு அமைச்சர் பாமி பாட்ஷில் ( Fahmi Fadzil ) தெரிவித்தார். ஆன்லைன் மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 500 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாக அவர் கூறினார்.

இந்த எண்ணிக்கை 2023 இல் பதிவு செய்யப்பட்டது மற்றும் 2024 ஆம் ஆண்டிற்கான மொத்த இழப்புகளின் எண்ணிக்கையை அமைச்சு இன்னும் பெறவில்லை, ஆனால் ஒட்டுமொத்தமாக, இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என் தாம் நம்புவதாக அவர் கூறினார்.

மோசடி பேர்வழிகள் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றுவதற்கு
13 முதல் 14 வகையான இணைய மோசடிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த தளங்களின் மூலம் பலரை எளிதில் ஏமாற்ற முடியும் என்று நினைப்பதால் இந்த தளங்களை அவர்கள் தேர்வு செய்கிறார்கள். இணைய மோசடிகளை முறியடிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக Kampung Nelayan Baru வில் Madani Ihasan சமூக திட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசியபோது பாமி இத்தகவலை வெளியிட்டார்.

மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் ஒத்துழைப்போடு, சமூக ஊடகங்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு இயக்கமும் நடத்தப்படும் என அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!