
இணையம் வாயிலாக, பண முதலீட்டு மோசடியில் ஈடுபட்ட தம்பதிக்கு, தாய்லாந்து நீதிமன்றம் 12 ஆயிரத்து 640 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பை வழங்கியது.
2019-ஆம் ஆண்டு, மார்ச் தொடங்கி அக்டோபர் மாதம் வரையில், இதர எழுவருடன் இணைந்து, முகநூல் வாயிலாக மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டை அந்த தம்பதி ஒப்புக் கொண்டதை அடுத்து, நீதிமன்றம் அவர்களுக்கு அந்த தண்டனையை விதித்து தீர்ப்பளித்தது.
93 விழுக்காட்டு லாப ஈவு வழங்கப்பட்டதால், மிக அதிகமாக ஈராயிரத்து 533 பேர் அந்த முதலீட்டு மோசடியை நம்பி ஏமார்ந்ததாக கூறப்படுகிறது.
அதனால், 130 கோடி தாய்லாந்து பாட் அல்லது 17 கோடியே பத்து லட்சம் மலேசிய ரிங்கிட் பணத்தை அவர்கள் இழந்தனர்.
மோசடி குற்றத்திற்காக, அந்த தம்பதிக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை பின்னர் தாய்லாந்து குற்றவியல் நீதிமன்றம் ஐயாயிரத்து 56 ஆண்டுகளாக குறைத்த வேளை ; தாய்லாந்து சட்டப்படி, ஒருவர் அதிகபட்சம் 20 ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனையை அனுபவிக்க முடியும் என்பதால், அவர்கள் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டிய அவசியம் இருக்காது என கூறப்படுகிறது.