கோலாலம்பூர், ஆகஸ்ட்-17, இணைய வங்கிச் சேவை பாதிப்பால் நட்டமடையும் வாடிக்கையாளர்கள், அதற்கான இழப்பீடு கோர வங்கிகளை நேரடியாகத் தொடர்புக் கொள்ளலாம்.
அவ்விவகாரத்தை மற்ற அதிகாரப்பூர்வ வழிகளின் கவனத்துக்கும் கொண்டுச் செல்லலாமென பேங்க் நெகாரா ஆளுநர் டத்தோ அப்துல் ரஷீட் கா’ஃபோர் (Datuk Abdul Rasheed Ghaffour) தெரிவித்தார்.
ஒருவேளை வங்கிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்குமிடையில் பிரச்னை தீர்க்கப்படவில்லை என்றால், Ombudsman போன்ற வழிகளை பயனர்கள் நாடலாம் என்றார் அவர்.
முன்னதாக இணைய வங்கிச் சேவையில் நீடித்த இடையூறுகள் காரணமாக, இரு பெரும் வங்கிகளான Maybank, CIMB-க்கு மொத்தமாக 50 லட்சம் ரிங்கிட்டுக்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டது.
அதில் Maybank-ற்கு 43 லட்சம் ரிங்கிட்டும், CIMB-க்கு 7 லட்சத்து 60 ஆயிரம் ரிங்கிட்டும் பேங்க் நெகாராவால் அபராதமாக விதிக்கப்பட்டன.