
கோலாலம்பூர், ஜூன், 24 – இணைய வாயிலான அந்நிய செலாவணி முதலீடு மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்திற்குரிய 77 தனிப்பட்ட நபகர்களை போலீசார் கைது செய்தனர். கிள்ளான் பள்ளத்தாக்கில் கடை பகுதி ஒன்றில் இந்த கும்பல் செயல்பட்டுள்ளதையும் போலீசார் கண்டறிந்தனர். 17 மற்றும் 37 வயதுடைய 43 ஆண்கள் மற்றும் 34 பெண்களைக் கொண்ட இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் உள்நாடு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் Amilhizam Abdul Shukor தெரிவித்தார். தொடக்கத்தில் இந்த அந்நிய செலாவணி முதலீடு இணைய வாயிலாக நடைபெற்றது. போலீஸ் மேற்கொண்ட நடவடிக்கையின்போது 35 கணினிகள், 29 மடிக்கணினிகள், ஒரு சிறிய கணினி , 20 கை தொலைபேசிகள் மற்றும் 38 வேலை பாஸ்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.