Latestமலேசியா

இதர சமயங்களை சிறுமைப்படுத்தும் சமய போதகர்கள் மீது நடவடிக்கை எடுப்பீர் NGO க்கள் பிரதமரிடம் மகஜர்

புத்ரா ஜெயா, பிப் 16 – இதர சமயங்களை சிறுமைப்படுத்தும் மற்றும் இழிவுபடுத்தும் குறிப்பிட்ட சில இஸ்லாமிய சமய போதகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி 60 க்கும் மேற்பட்ட அரசு சார்பற்ற இயக்கங்கள் பிரதமர் DatoSri Ismail Sabri Yaakobப்பிடம் இன்று மகஜர் சமர்ப்பித்தன.

இதுபோன்ற இஸ்லாமிய சமய போதகர்களுக்க எதிராக ஜாக்கிம் எனப்படும் இஸ்லாமிய மேம்பாட்டுத்துறை, மனித உரிமைகள் ஆணையமான சுஹாக்காம், மற்றும் சட்டத்துறை தலைவர் அலுவலகம் ஆகியவவை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அரசு சார்பற்ற இயக்கங்கள் வலியுறுத்தின.

மலேசியாவின் பல்லின மற்றும பல சமய மக்களிடையே இருந்துவரும் அமைதிக்கு மிரட்டலாக இருக்கும் சமய போதகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம் என Global Human Rights Federation இயக்கத்தின் தலைவர் S. Shashi Kumar தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!