Latestமலேசியா

இதர சமயங்களை சிறுமைப்படுத்துவோர் விவகாரத்தில் சட்டத்துறை அலுவலகம் இரட்டைப் போக்கு அரசு சார்பற்ற இயக்கம் சாடல்

கோலாலம்பூர், ஆக 17 – இஸ்லாத்தை தவிர இதர சமயங்களை சிறுமைப்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறும் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தின் இரட்டைப் போக்கை மனித உரிமைக்கான அரசு சார்பற்ற இயக்கம் சாடியது. இந்த விவகாரத்தை கையாள்வதில் விருப்பு வெறுப்புடன் இரட்டை போக்கை சட்டத்துறை தலைவரின் அலுவலகம் கொண்டிருப்பதாக Global Human Rights Federation எனப்படும் உலகளாவிய மனித உரிமை சம்மேனத்தைச் சேர்ந்த Peter John Jaban தெரிவித்தார். இஸ்லாமிய சமயத்தை சிறுமைப்படுத்துவோருக்கு எதிராக கடுமையான அபராதங்கள் விதிப்பது உட்பட உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. ஆனால் இதர சமயங்களை சாடுவோர் அல்லது சிறுமைப்படுத்துவோர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லையென அவர் சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!