
அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸில், மிகப் பெரிய Pizza-வை தயாரித்து உலக சாதனையை முறியடிக்கும் முயற்சியில் Chef சமையல் நிபுணர்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
நான்காயிரத்து 298 மீட்டர் நீலம் கொண்ட அந்த Pizza-வை 68 ஆயிரம் துண்டுகளாக வெட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் தொடக்க கட்டமாக, பீட்சாவின் தளமாக, பெரிய செவ்வக வடிவிலான மாவு துண்டுகள் அறை ஒன்றில் கிடத்தப்பட்டு அதன் மேல், ‘சீஸ்’, பெப்பரோனி, தக்காளி சாஸ் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.
இந்த முயற்சியின் வாயிலாக தயாரிக்கப்படும் Pizza, உணவு வங்கிகளிடம் வழங்கப்படும் என்பதால், உணவு விரையம் ஆகாது என அமெரிக்க Pizza Hut தலைவர் கூறியுள்ளார்.
இதற்கு முன், 2016-ஆம் ஆண்டு, Pizza-வின் பூர்வீகமான இத்தாலியில், 400 Chef-கள் ஒன்றிணைந்து, ஆயிரத்து 853 மீட்டர் நீலம் கொண்ட Pizza தயாரித்து உலக சாதனையை பதிவுச் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.